‘ரூ.1க்கு ஒரு கிலோ வெண்டைக்காய் ‘..வாங்க ஆள் இல்லாததால் ஆற்றில் கொட்டப்படும் அவலம்!

 

‘ரூ.1க்கு ஒரு கிலோ வெண்டைக்காய் ‘..வாங்க ஆள் இல்லாததால் ஆற்றில் கொட்டப்படும் அவலம்!

தேனி அருகே அதிகப்படியான விளைச்சலால் வண்டி வண்டியாக வெண்டைக்காய் ஆற்றில் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் பின்னத்தேவன்பட்டி, ஆண்டிபட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று நீர் பாசனத்தின் மூலமாக வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுகிய கால பயிரான வெண்டைக்காய் ஓணம் பண்டிகையின் போது ஒரு கிலோ சுமார் ரூ.120க்கு விற்கப்பட்டதால், விலை அதிகரிக்கும் என எண்ணி விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடியில் ஈடுபட்டனர்.

‘ரூ.1க்கு ஒரு கிலோ வெண்டைக்காய் ‘..வாங்க ஆள் இல்லாததால் ஆற்றில் கொட்டப்படும் அவலம்!

அதன் படி, தேனியில் இருந்து காய்கறி சந்தைக்கு அதிகப்படியான வெண்டைக்காய் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் வெண்டைக்காய் வாங்குவதில் ஆர்வம் காட்டாததால், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.1க்கு விற்கப்படும் அளவுக்கு வந்து விட்டது.

ஒரு ரூபாய்க்கு கூட யாரும் வாங்காததால், வேறு வழி இல்லாமல் விவசாயிகள் வெண்டைக்காயை வீரபாண்டி ஆற்றில் வண்டி வண்டியாக கொட்டியுள்ளனர். ஏக்கருக்கு சுமார் ரூ.40 ஆயிரம் வரை செலவிட்டு விளைவிக்கப்பட்ட வெண்டைக்காய், ஆற்றில் கொட்டும் நிலை ஏற்பட்டது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.