‘அம்மன் போல நின்று’ கொரோனா விழிப்புணர்வு: அசத்திய பெண் மருத்துவர்கள்!

 

‘அம்மன் போல நின்று’ கொரோனா விழிப்புணர்வு: அசத்திய பெண் மருத்துவர்கள்!

மதுரையில் பெண் மருத்துவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியது பாராட்டை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவிய மாவட்டங்களுள் மதுரையும் ஒன்று. அங்கு தற்போது பாதிப்பு குறைந்து வருமாம் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையிலும் ரயில்வே மருத்துவமனையிலும் முகாம்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளை காக்கும் பொருட்டு கொரோனா வார்டுகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் 24 மணி நேரம் தொய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.

‘அம்மன் போல நின்று’ கொரோனா விழிப்புணர்வு: அசத்திய பெண் மருத்துவர்கள்!

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளின் மன உளைச்சலை போக்கவும் உற்சாகத்தை ஏற்படுத்தவும் ரயில்வே மருத்துவமனை பெண் மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கையில் மாஸ்க், சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை ஏந்தி அம்மன் போல நின்றனர். இது அம்மனே நேரில் வந்தது போல இருந்ததாக நோயாளிகள் உற்சாகம் அடைந்தனர்.