நள்ளிரவில் அழைத்த போலீஸ் அதிகாரி -நடுங்கிப்போன பெண் டாக்டர் -அடுத்து நடந்த அதிரடி .

 

நள்ளிரவில் அழைத்த போலீஸ் அதிகாரி -நடுங்கிப்போன பெண் டாக்டர் -அடுத்து நடந்த அதிரடி .

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்)  மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர்,  ஒரு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவரிடம் அடிக்கடி இரவில் போன் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டின் பேரில்  சி.ஆர்.பி.எஃப் .விசாரணை குழு அந்த போலீஸ் அதிகாரி  மீது விசாரணைக்கு உத்தரவிட்டது.

நள்ளிரவில் அழைத்த போலீஸ் அதிகாரி -நடுங்கிப்போன பெண் டாக்டர் -அடுத்து நடந்த அதிரடி .

அந்த விசாரணையில் முசாபர்நகரில் பணியாற்றும்  டி.ஐ.ஜி சுரிந்தர் பிரசாத் என்பவர் ,முசாபர்நகரின் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு பெண் டாக்டருக்கு,நள்ளிரவில்   பலமுறை தொலைபேசி அழைப்புகள் செய்ததாக அவர் குற்றம் சுமத்தினார்

மேலும் அந்த பெண் டாகடர் தனது புகாரில் அந்த போலீஸ் அதிகாரி தன்னுடைய அறைக்குள் குடி போதையில் நுழைந்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றபோது தான் வெளியே ஓடிவிட்டதாக கூறினார்

இந்த புகார் பற்றி மற்றொரு அதிகாரி கூறும்போது ,”அந்த உயர் போலீஸ் அதிகாரி  இது போல் முன்பொருமுறை நடந்து கொண்ட குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது .மேலும் அவர் விவாகரத்து பெற்றவர் மட்டுமல்லாமல் , குடிப்பழக்கம் உள்ளவர் ” என்றார் .

இது பற்றி ஒரு பெண் விசாரணை அதிகாரி கூறும்போது  ” பாலியல் துன்புறுத்தல் வரும்போது, ​​பெண்கள் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய தயங்கக்கூடாது. சி.ஆர்.பி.எஃப் இன் இந்த  விசாரணையில் பொலிசார் தலையீடு இல்லாமல்  தனியாக நடக்கும் .மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று கூறினார்.