முதுமலை அருகே புலி தாக்கியதில் மலைவாழ் பெண் பரிதாப பலி; பீதியில் மக்கள்!

முதுமலை அருகே புலி தாக்கியதில் மலைவாழ் பெண் பரிதாப பலி; பீதியில் மக்கள்!

சமீப காலமாக வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் வனப்பகுதியில் இருந்து உணவை தேடி வெளியேறி வருகின்றன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் புலிகள், வெளியே நடமாடுவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். சமீபத்தில் கேரளாவில் உணவு தேடி சுற்றித்திரிந்த கர்ப்பிணி காட்டு யானை வெடிமருந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மக்கள் தங்களை காத்துக் கொள்ள இது போன்ற செயல்களை செய்யக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

முதுமலை அருகே புலி தாக்கியதில் மலைவாழ் பெண் பரிதாப பலி; பீதியில் மக்கள்!

ஆனால் அப்பகுதி வாழ் மக்களோ, காட்டு விலங்குகள் தங்களை தாக்காமல் பாதுகாத்து கொள்ள இதனை செய்ய வேண்டி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் முதுமலை அருகே புலி தாக்கியதால் மலைவாழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முதுமலை அருகே புலி தாக்கியதில் மலைவாழ் பெண் பரிதாப பலி; பீதியில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே இருக்கும் வனப்பகுதியில் மலைவாழ் பெண் ஒருவர், மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணை கவுரி புலி தாக்கியிருக்கிறது. அதனால் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.