கொரோனா பரிசோதனைக்கு எதிர்ப்பு… கோவையில் மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் முயற்சி…

 

கொரோனா பரிசோதனைக்கு எதிர்ப்பு… கோவையில் மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் முயற்சி…

கோவை

கோவையில் கொரோனா பரிசோதனை செய்ய கூறிய மாநகராட்சி ஊழியரை, விடுதி உரிமையாளர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கிராஸ்கட் சாலையில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி 52-வது வார்டில் உள்ள பெண்கள் விடுதியில் உள்ளவர்களை பரிசோதனை செய்யும்படி மாநகராட்சி ஊழியர்கள் கூறினர்.

கொரோனா பரிசோதனைக்கு எதிர்ப்பு… கோவையில் மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் முயற்சி…

அதற்கு, விடுதி உரிமையாளர் வின்சன் என்பவர் மறுப்பு தெரிவித்ததால், மாநகராட்சி ஊழியர்கள் விடுதி என்பதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது என்றும், எனவே பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த வின்சன், மாநகராட்சி ஊழியரை அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரது செல்போனை பறித்தும் வீசினார்.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனிடையே, இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியாதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியரை தாக்க முயன்ற விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.