இந்திய-சீன எல்லை பிரச்னை: பிரதமரிடம் பாதுகாப்புத்துறை விளக்கமளிக்க முடிவு!

இந்திய-சீன எல்லை பிரச்னை: பிரதமரிடம் பாதுகாப்புத்துறை விளக்கமளிக்க முடிவு!

லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடியிடம் மத்திய பாதுகாப்புத்துறை விளக்கமளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

சமீப காலமாக இந்திய சீன எல்லையான லடாக்கில் பதற்றம் நிலவுகிறது. கடந்த மாதம் லடாக் எல்லையில், சீனப்படை அத்துமீறி நடந்த தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இருந்தே சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு நாட்டு ராணுவமும் தனது படைகளை, லடாக்கில் குவித்திருக்கிறது.

இந்திய-சீன எல்லை பிரச்னை: பிரதமரிடம் பாதுகாப்புத்துறை விளக்கமளிக்க முடிவு!

ஓப்பந்தத்தை மீறி எல்லை மீறக்கூடாது என இந்திய ராணுவம் தெரிவித்து வரும் நிலையிலும், சில நாட்களுக்கு முன்னர் சீனப்படை அத்துமீறியதாகவும் அதனை இந்தியப்படை விரட்டி அடித்ததாகவும் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்புப்படை அமைச்சருடன் ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சீனப்படை ஒப்பந்தத்தை மீறி அத்துமீறுவதாகவும் எல்லையைத் தாண்டக்கூடாது என்றும் காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்திய-சீன எல்லை பிரச்னை: பிரதமரிடம் பாதுகாப்புத்துறை விளக்கமளிக்க முடிவு!

இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர், லடாக் எல்லையில் என்ன நடந்தது என்பது குறித்து மத்திய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சர்கள் குழு பிரதமர் மோடியிடம் விளக்கமளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.