இந்தியாவுடன் மோதல் இல்லை – லடாக் எல்லையில் படைகள் வாபஸ்

 

இந்தியாவுடன் மோதல் இல்லை – லடாக் எல்லையில் படைகள் வாபஸ்

By subas Chandra bose
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் தங்களது படைகளைத் தயார் செய்து வந்தன.எந்த நிலையிலும் சீனா, இந்தியா மீது போர் தொடுக்கலாம் என அமெரிக்கா எச்சரித்தது.

இந்தியாவுடன் மோதல் இல்லை – லடாக் எல்லையில் படைகள் வாபஸ்


இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில இந்தியா- சீனா வீரர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.. இதில் சீனாவைச் சேர்ந்த 50 வீரர்களும், இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்களும் மரணத்தை தழுவினர். போர் பதட்டத்திற்கு வழிவகுத்த இந்த மோதலையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. இந்திய- சீன வெளியுறவு மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன.

இந்தியாவுடன் மோதல் இல்லை – லடாக் எல்லையில் படைகள் வாபஸ்


இதனையடுத்து 8-வது கட்ட சுற்று பேச்சுவார்த்தை கடந்த 6-ந்தேதி நடந்தது. அப்போது லடாக் எல்லையில் படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இதன்படி மொத்தம் 3 கட்டங்களாக இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்படுகின்றன. முதல் கட்டமாக இரு நாடுகளும் டாங்கிகள், கவச வாகனங்களை எல்லைக் கோட்டில் இருந்து வாபஸ் பெற வேண்டும்.2-ம் கட்டமாக பான்காங் ஏரிப் பகுதியில் முகாமிட்டிருக்கும் படை வீரர்களில் 30 சதவீத படை வீரர்களை தினமும் வாபஸ் பெறச் செய்ய வேண்டும்..

இந்தியாவுடன் மோதல் இல்லை – லடாக் எல்லையில் படைகள் வாபஸ்

3-ம் கட்டமாக பான்காங் ஏரியின் தெற்கு கரையில் முகாமிட்டுள்ள இரு நாடுகளின் வீரர்களும் பழைய நிலைகளுக்கு திரும்பி செல்ல வேண்டும். படைகள் முறையாக வாபஸ் பெறப்படுகிறதா என்பதை ஆளில்லா விமானங்கள் மூலம் இரு தரப்பும் கண்காணிக்கலாம் என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 9-ம் கட்ட இந்த வாரம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் இரு தரப்பு படைகளும் முழ்மையாக வாபஸ் பெறுவது தொடர்பான திட்டம் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.