இடப்பற்றாக்குறையால் அழைத்து செல்ல மறுத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்… மூச்சு திணறி இறந்த முதியவர்!

இடப்பற்றாக்குறையால் அழைத்து செல்ல மறுத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்… மூச்சு திணறி இறந்த முதியவர்!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் சிறப்பு கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பூந்தமல்லி, அம்பத்தூர், தாம்பரம், நந்தனம் வர்த்தகம், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி உட்பட 11 மையங்கள் உள்ளன.

இடப்பற்றாக்குறையால் அழைத்து செல்ல மறுத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்… மூச்சு திணறி இறந்த முதியவர்!

இருப்பினும் கொரோனா பாசிட்டிவ் என்ற ரிசல்ட்டுடன் ஒருவர் சென்றால் அங்கு அலைக்கழிப்பும், காத்திருத்தலும் தான் அதிகமாக இருக்கிறதாம். முறையான பதில் இல்லாமல் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் வெகுநேரம் காத்து கிடப்பதுடன், ராஜீவ் காந்தி மருத்த்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை என அங்கங்கே பந்தாடப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இடப்பற்றாக்குறையால் நிகழ்கிறதாம்.

இடப்பற்றாக்குறையால் அழைத்து செல்ல மறுத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்… மூச்சு திணறி இறந்த முதியவர்!

அந்த வகையில் சென்னை அடுத்த புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 73 வயது முதியவருக்கு கொரோனா தொற்று நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் இடம் பற்றாக்குறையாக இருப்பதாக கூறி முதியவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு 4 மணிநேரத்தில் முதியவர் பலியானார். சரியான நேரத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் முதியவர் இறப்பு நிகழ்ந்திருக்காது என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.