தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

 

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

உத்தர பிரதேசத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில், அனைத்து வர்த்தகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகங்களுக்கும் தொழிலாளர் சட்டங்களில் நான்கை தவிர மற்ற அனைத்து சட்டங்களிலிருந்து தற்காலிகமாக 3 ஆண்டுகள் விலக்கும் அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசியும் உத்தர பிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

அனைத்து இந்திய மஜிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லீமின் (AIMIM) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி எப்போதும் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். ஆன்லைனில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: நம் நாட்டில் மொத்தம் 19 கோடியை 50 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 49 சதவீத தொழிலாளர்கள் சிறு தொழில்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

அவர்களுக்கு நிதி உதவி இல்லை. உத்தர பிரதேச அரசு தொழிலாளர்கள் தொடர்பான 38 சட்டங்களில் 35ஐ ரத்து செய்துள்ளது. ஊதியம் செலுத்தும் சட்டம் போய் விட்டது. பணிபுரியும் இடத்தில் தொழிலாளர்களுக்கு வெண்டிலேஷன், டாய்லெட் மற்றும் இடைவேளை கிடையாது. எந்த வர்த்தகமும் இல்லை என்று குறிப்பிட்டு ஊதியம் செலுத்தும் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு அநீதியாகும். விசாரணை மற்றும் சம்பளம் வழங்காமல் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க முடியாது. ஆனால் எவை எல்லாம் நீக்கப்பட்டதோ அதற்கு எல்லாம் லாக்டவுன் நல்ல வாய்ப்பாக அமைந்தது. இவை அனைத்தும் தவறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.