Home தமிழகம் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது- முருகன்

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது- முருகன்

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை, கலைவாணர் அரங்கில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளையும் அமித்ஷா காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு எம்.ஆர்.சி நகரில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு அமித்ஷா சென்றார். அங்கு பாஜக மாவட்ட – மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், “வெற்றி வேல் …வீரவேல்! தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது. கொரோனாவை கையாண்டதில் மோடி உலகத்திற்கே வழி கட்டியாக விளங்கி வருகிறார். NEP, மும்மொழி கொள்கை போன்றவற்றை திமுக எதிர்க்கிறது, ஆனால் அவர்கள் கட்சி தலைவர்களின் பள்ளிகளில் மூன்றாம் மொழி கற்று கொடுக்கிறார்கள். விவசாய சீர் திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்தோம். பாஜகவினர் விவசாயிகளின் நண்பர்கள். தடைகளை மீறி திருசெந்தூரில் வெற்றி வேல் யாத்திரை நிறைவு பெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்ட பேரவையை அலங்கரிப்பார்கள்” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கமல்ஹாசன் ஒரு கோழை – வைகைச் செல்வன் விளாசல்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பாக காஞ்சிபுரம் காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்செய்தியாளர்களிடம் பேசிய...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்தம்பித்தது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சுங்கச்சாவடியை கடக்க ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன. பொங்கல்...

பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத்...

வாணியம்பாடி எருது விடும் விழா- 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!