கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எல்.முருகன்

கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எல்.முருகன்

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது, தன்னுடைய சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு எனக் குறிப்பிட்டிருந்தது ’தட்டச்சுப் பிழை’ என விளக்கமளித்துள்ளார்.

பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற நாளிதழ் ஒன்றில் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலாமான கொங்கு மண்டலத்தைப் புதுச்சேரியை போல தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இயக்க தலைவர்களும் பாஜகவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துவந்தனர். ஆனால் அதனை பொருட்படுத்ததாத மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன் குறித்த பாஜக செய்திக்குறிப்பிலும் கொங்குநாடு எனக் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற பின் சென்னை வந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இனி பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம். மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது, தன்னுடைய சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு எனக் குறிப்பிட்டிருந்தது ’தட்டச்சுப் பிழை’. கொங்குநாடு என்ற வார்த்தை வேண்டுமென்றே போடப்பட்டது கிடையாது” எனக் கூறினார்.