தமிழக மக்கள் திமுகவினரை ஓடஓட விரட்டவுள்ளனர்- எல் முருகன்

 

தமிழக மக்கள் திமுகவினரை ஓடஓட விரட்டவுள்ளனர்- எல் முருகன்

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சி இன்று மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறது.

அதனையொட்டி மதுரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுகூட்டத்தில் பேசிய மாநில தலைவர் எல்.முருகன், “வேல் பூஜைகளை நாம் வீட்டில் இருந்தபடி செய்தோம், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கட்டுபாடுகளுடன் இருப்பார்கள். கொரோனா காலத்தில் மற்ற கட்சிகள் பயந்து மக்களை சந்திக்காமல் இருந்த நிலையில் , பாரதிய ஜனதா கட்சி வேல் யாத்திரை நடத்தினோம். பாரதிய ஜனதா கட்சி வேல் யாத்திரை திருத்தணியில் தொடங்கியது. அதே இடத்தில் திமுகவினரையும் வேல் தூக்க வைத்தது பாரதிய ஜனதா கட்சி

தமிழக மக்கள் திமுகவினரை ஓடஓட விரட்டவுள்ளனர்- எல் முருகன்

திமுக தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் துரோகம் அதிகம் செய்துள்ளது. ஸ்டெலைட் ஆலை , ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தது திமுக, கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து தாரை வார்த்தது திமுக கமிஷன் , ஊழல் , நில அபகரிப்பு உள்ளிட்டவற்றுடன் திமுகவை பிரிக்க முடியாது. தமிழக பொதுமக்கள் திமுகவினரை ஏப்ரல் மாதம் ஓட ஓட விரட்ட உள்ளனர். கந்த கஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எந்த கருத்து கூறவில்லை. தை பூசத்திற்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி கூறிக்கொள்கிறோம். ஏன் திமுகாவை புறக்கணிக்க வேண்டும் என்றால் அவர்கள் தேசத்திற்கு விரோதமானவர்கள், சமுகநீதியை பற்றி பேசு திமுக சமுகநீதியை கடைபிடிக்காது தாமரை சொந்தங்கள் அனைவரும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தாமரைக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.