பாஜக தலைவர் முருகனுக்கு முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் நிகழ்ந்த அவமானம்!

 

பாஜக தலைவர் முருகனுக்கு முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் நிகழ்ந்த அவமானம்!

முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ், திமுக ஸ்டாலின், அமமுக தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக சார்பில் தேவர் நினைவிடத்திற்குள் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் சென்று விட்டனர். சிறிது நேரத்திற்குள் எல்.முருகனும் அழைத்து வரப்பட்டார். அஞ்சலி செலுத்திய தலைவர்களுக்கு நினைவிடத்தின் நிர்வாகிகள் துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், தினகரனுக்கு மாலை போட்டு மரியாதை செய்தார்கள்.

பாஜக தலைவர் முருகனுக்கு முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் நிகழ்ந்த அவமானம்!

பாஜகவில் முருகன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மூவரில் யாருக்கு நன்றி மரியாதை செய்வது என்று குழப்பம் வந்தது. எச்.ராஜா ஏதோ சொன்னதும், தற்போது கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத பாஜகவின் எச்.ராஜாவிற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. இதனை பார்த்த பாஜக தலைவரான எல்.முருகன் உடனே அங்கிருந்து திரும்பிச் செல்ல முயன்றார். இதைக் கவனித்த நயினார் நாகேந்திரன் பூசாரியிடம் ஒரு துண்டை வாங்கி, எல்.முருகன் கழுத்தில் போட்டு அவரை சமாதானம் செய்தார்.