ரஜினி கட்சியுடன் பாஜக கூட்டணியா? : எல்.முருகன் பதில்!

 

ரஜினி கட்சியுடன் பாஜக கூட்டணியா? : எல்.முருகன் பதில்!

பாரத் பந்த் தமிழகத்தில் தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எல். முருகன், “பாஜக சார்பில் விவசாயிகளின் நண்பன் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, அனைத்து கிராம மக்களுக்கும் வேளாண் சட்டங்கள் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொண்டனர். இந்த சட்டத்தின் படி விவசாயிகள் விலையை நிர்ணயம் செய்து நேரடியாக விற்க முடியும்” என தெரிவித்தார்.

ரஜினி கட்சியுடன் பாஜக கூட்டணியா? : எல்.முருகன் பதில்!

தொடர்ந்து, “மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போது இதற்கு ஆதரவு அளித்த திமுக தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக வெளியிட்டிருந்த தகவல் தான் தற்போது வேளாண் சட்டங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் பாரத் பந்த் தோல்வி அடைந்து விட்டது. கடையை மூடச் சொல்லி திமுகவினர் வலியுறுத்தியிருக்கின்றனர்” என தெரிவித்தார்.

ரஜினி கட்சியுடன் பாஜக கூட்டணியா? : எல்.முருகன் பதில்!

மேலும் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்சியின் தலைமை தான் அதனை முடிவு செய்யும் என்றும் வேல் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றும் தெரிவித்தார்.