தற்காலிகமாக திறக்கவே ஒப்புக் கொண்டோம் – எல்.முருகன்

 

தற்காலிகமாக திறக்கவே ஒப்புக் கொண்டோம் – எல்.முருகன்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணிய வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தற்காலிகமாக திறக்கவே ஒப்புக் கொண்டோம் – எல்.முருகன்

வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்தலாம் என நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா? என்பது குறித்து முதல்வர் பழனிசாமி அனைத்து கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பங்கேற்ற நிலையில், பெரும்பாலான கட்சிகள் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க ஒப்புதல் அளித்தன.

தற்காலிகமாக திறக்கவே ஒப்புக் கொண்டோம் – எல்.முருகன்

அதன் படி, 4 மாதங்களுக்கு தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முதல்வர் பழனிசாமி ஒப்புதல் வழங்கினார். அக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தற்போதைய சூழலில் மக்களின் உயிர் முக்கியம். ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யவேண்டும். தமிழகத்தின் தேவைப் போக, பிற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். இந்த முடிவு நான்கு மாத காலத்திற்கானது மட்டுமே என்று தெரிவித்தார்.