பாஜகவில் சேர பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்! விரைவில் இணைவார்கள்- முருகன்

 

பாஜகவில் சேர பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்! விரைவில் இணைவார்கள்- முருகன்

வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அதிகபடியான எம்எல்ஏக்கள் சட்டசபையில் இடம் பெறுவார்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பிஜேபியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளரிடம் பேசினார்.

பாஜகவில் சேர பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்! விரைவில் இணைவார்கள்- முருகன்

அப்போது பேசிய முருகன், “அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம் அதன் செயல்பாடுகளில் யாரும் அரசியல் செலுத்தி தலையிடக் கூடாது. பட்டியலின தலைவர்கள் அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அது சம்பந்தமாக யார் தவறு செய்திருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் இடம் பெறுவார்கள். அதற்கான அனைத்து பணிகளையும் திட்டமிட்டு செய்து வருகிறோம். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்காக பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் இணைவார்கள்” எனக் கூறினார்.