பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளரா? எல்.முருகன் பதில் சொல்ல மறுப்பு

பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளரா? எல்.முருகன் பதில் சொல்ல மறுப்பு

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார்.

பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளரா? எல்.முருகன் பதில் சொல்ல மறுப்பு

முதல்வருடன் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “வேளாண் பாதுகாப்பு சட்டத்தை வரவேற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். கருப்பர் கூட்டம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரிக்கைவிடுத்தோம். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்காக அவருக்கு வாழ்த்து கூற சென்றோம்” எனக் கூறினார். முன்னதாக முதல்வர் வேட்பளாராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? அல்லது அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பதில் சொல்ல மறுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.