விரைவில் தமிழக பாஜகவினர் ஒருவருக்கு தேசிய பதவி: எல். முருகன் உறுதி

 

விரைவில் தமிழக பாஜகவினர் ஒருவருக்கு தேசிய பதவி: எல். முருகன் உறுதி

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழல், தேர்தல் வியூகங்கள் மற்றும் தேசிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழக பாஜகவினர் இடம்பெறாதது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுடனான சந்திப்புக்கு பின் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “பாஜக தேசியச் செயலாளர்கள் நியமனம் பட்டியல் இறுதியானது இல்லை. இனிவரும் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெயர் இருக்கும் என்று கூறினார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நடப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கட்சியினுடைய விஷயத்தில் தலையிடுவது சரியானதாகவும் நாகரிகமாகவும் இருக்காது.

விரைவில் தமிழக பாஜகவினர் ஒருவருக்கு தேசிய பதவி: எல். முருகன் உறுதி

மோடி மீது இருக்கிற நம்பிக்கையால் பிற கட்சிகளிலிருந்து, ஏராளமானோர் பாஜகவில் இணைந்துவருகின்றனர். மோடி ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு மிகப்பெரிய திறமையான நல்ல ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்டவர்களும், பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களும் பாஜக பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள்” எனக் கூறினர்.