அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை! எல்.முருகன் பளீர்

 

அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை! எல்.முருகன் பளீர்

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை Grand Western Trunk Road என தமிழக அரசு திடீரென மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக Grand western trunk road என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டது.

அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை! எல்.முருகன் பளீர்

இதனிடையே சாலை பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலாளரிடம் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் திநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை பாஜகவினர் வழங்க வேண்டும். மதுரையில் பாஜகவினரை அம்பேத்கர் சிலைக்கு மலை அணிவிக்க விடாமல் தடுத்த விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் ஈ.வே.ரா நெடுஞ்சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கும் பாஜகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. நெடுஞ்சாலை துறை அறிவிப்பில் grand Western trunk road என்ற பெயர் முன்பே இருந்தது. ஆட்சியில் இருந்தபோது அந்த பெயரை மாற்ற திமுக முயற்சித்திருக்கலாம்” என தெரிவித்தார்.