Home அரசியல் திமுகவுக்கு பயம்… கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களே ஒதுக்குகிறது: எல். முருகன்

திமுகவுக்கு பயம்… கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களே ஒதுக்குகிறது: எல். முருகன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். அமமுகவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பாஜக மத்தியஸ்தம் செய்யவில்லை. அதிமுகவுடனான தொகுதி பங்கீடு விரைவில் முடிந்து விடும். நிச்சயம் பாஜக இரட்டை இலக்கத்தில் தமிழகத்தில் போட்டியிடும். தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது. மக்கள் மீதும், தேசத்தின் வளர்ச்சியிலும் பாஜகவுக்கு அதிக அக்கறை கொண்டுள்ளது.

மத விரோத சக்திகளோடு இணைந்து இந்துக்களுக்கு எதிராக துரோகம் செய்து வரும். எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே மக்களின் எண்ணம். திமுக அச்சம் அடைந்துள்ளதால் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடம் ஒதுக்குகிறது. தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலக்கத்தில் பாஜகவினர் பேரவைக்குச் செல்வார்கள்” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews