சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதை மனசார வரவேற்கிறேன் – எல். முருகன்

 

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதை மனசார வரவேற்கிறேன் – எல். முருகன்

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அறிக்கை என சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். ஜெயல‌லிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதை மனசார வரவேற்கிறேன் – எல். முருகன்

இந்நிலையில் சசிகலாவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் எல். முருகன், “சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை முழு மனதோடு வரவேற்கிறேன். சசிகலா தனது அறிக்கையில் கூறியிருக்கும் காரணத்தை அனைவரும் வரவேற்க வேண்டும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் அம்மா ஆட்சி தொடரவேண்டுமென தெரிவித்துள்ளார். அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் சசிகலா மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறார். சசிகலாவின் நோக்கமே திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான்” எனக்கூறினார்.