பாஜக என்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே இருக்கும்: எல்.முருகன்

 

பாஜக என்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே இருக்கும்: எல்.முருகன்

ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதால் அதிமுக தொகுதிப்பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சென்னையில் இன்று முதல்வர் இல்லத்தில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதிமுகவுடனான கூட்டணிக்கு பாமக தயங்கிவந்த சூழலில், கல்வி- வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பாமகவுடனான பாமகவுடனான கூட்டணி இறுதி செய்யப்பட்டு, 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன

பாஜக என்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே இருக்கும்: எல்.முருகன்

இந்நிலையில் சென்னை திநகரில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,பாஜக தேர்தல் நிர்வாக குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்கும். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக முடிவு செய்யும். பாஜக என்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவே இருக்கும்.

தமிழக அரசு வன்னியர் மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது, பாஜக என்றும் இட ஒதுக்கீட்டிற்கும் ஆதரவாகவும் இருக்கும். உள் ஒதுக்கீடு முடிவை மனதார வரவேற்கிறோம்” என தெரிவித்தார்.