2013ஐ ஒப்பிடும்போது பெட்ரோல், டீசல் விலை குறைவு தான் – எல்.முருகன்

 

2013ஐ ஒப்பிடும்போது பெட்ரோல், டீசல் விலை குறைவு தான் – எல்.முருகன்

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், வரும் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கும் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் கோவையில் நடைபெறவுள்ளது. ராகுல்காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.

2013ஐ ஒப்பிடும்போது பெட்ரோல், டீசல் விலை குறைவு தான் – எல்.முருகன்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். 2013, 2014 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக தெரிவித்தார். அப்போது கேஸ் விலை ரூ.1000க்கு மேல் இருந்தது தற்போது வெறும் ரூ.700க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பொருட்களின் விலையும் குறைந்துதான் இருக்கின்றன. கொரோனாவால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இதன் எதிரொலியால் ஏராளமான பொருட்கள் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன.

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பதை விட, எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதே எங்களின் நோக்கம். நிச்சயம் நாங்கள் இரட்டை இலக்க உறுப்பினர்களுடன் சட்டமன்றத்தில் இருப்போம். அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து தேர்தலுக்கு பிறகு தேசிய தலைமை முடிவு செய்யும்” என தெரிவித்தார்.