அதிமுக-பாஜக இடையே மனக்கசப்பா? தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதில்!

 

அதிமுக-பாஜக இடையே மனக்கசப்பா? தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதில்!

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே வேளையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்றாலும் இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீட்டிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இ-பாஸ் விவகாரம், பிள்ளையார் சிலை சர்ச்சை என பல்வேறு சம்பவங்களில் பாஜகவின் கருத்தை முதல்வர் பழனிசாமி நிராகரித்தார்.

அதிமுக-பாஜக இடையே மனக்கசப்பா? தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதில்!

அதுமட்டுமில்லாமல், பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜாவுடன் அமைச்சர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டதால் கூட்டணியில் பிரச்னை ஏற்படும் என ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்திருந்தார். இது ஒரு புறமிருக்க, அதிமுக உள்ளேயே அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையே எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றும் கூறினார். மேலும், புதிய சட்டம் மூலம் மதுரை மல்லிகை பூவை டெல்லி முதல் லண்டன் வரை கொண்டு விவசாயி விற்கலாம் என்றும் தெரிவித்தார்.