சசிகலாவால் மாற்றம் ஏற்படுமா?- எல்- முருகன்

 

சசிகலாவால் மாற்றம் ஏற்படுமா?- எல்- முருகன்

சேலம் 5 ரோட்டில் உள்ள ஹோட்டலில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார்.

சசிகலாவால் மாற்றம் ஏற்படுமா?- எல்- முருகன்

முன்னதாக சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், “தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.03 லட்சம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகளாக மேம்படுத்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னேற்றம் கொடுக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. சசிகலா வந்தால் மாற்றம் ஏற்படுமா என அவர் தமிழகம் வந்த பிறகு பார்க்கலாம். எதிர்க்கட்சி தலைவர் என்பதால் முக ஸ்டாலின் மத்திய பட்ஜெட்டை வரவேற்கவில்லை. சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தடுக்க சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு எதிர்க்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக சந்திக்கவுள்ளது.நாடாளுமன்ற தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி தற்போதும் தொடர்கிறது.

எங்கள் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். நாங்கள் மூன்றாவது அணியை அமைக்க முயற்சிக்கவில்லை. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்துள்ளது. அந்த முடிவை நாங்கள் ஏற்கிறோம். ராகுல்காந்தி வருகையால் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும். திமுக- காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனவே அந்த கூட்டணி விரைவில் உடைவதற்கு வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.