பாஜக இளைஞரணியில் இளைஞர்களுக்கு மட்டுமே இடம்; தாத்தாக்களுக்கு இல்லை- எல். முருகன்

பாஜக இளைஞரணியில் இளைஞர்களுக்கு மட்டுமே இடம்; தாத்தாக்களுக்கு இல்லை- எல். முருகன்

சேலத்தில் நடைபெற்ற பாஜக இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி தான் இன்னும் இழுபறியில் உள்ளது. மத்திய பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை சிலர் தான் எதிர்க்கின்றனர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தற்போது நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இருப்பாதல் விற்பனை செய்யப்படுகிறது. சசிகலா வந்தால் தான் அவரது அரசியல் நிலைபாடு குறித்து தெரியும்.

பாஜக இளைஞரணியில் இளைஞர்களுக்கு மட்டுமே இடம்; தாத்தாக்களுக்கு இல்லை- எல். முருகன்

இளைஞர் அணியில் இளைஞர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். தாத்தாக்கள் இளைஞர் அணியில் இருக்க முடியாது. இனி 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பாஜக இளைஞரணியில் இடம்பெறுவார்கள். தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம்.” என பேசினார்.