சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- முருகன்

 

சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- முருகன்

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்களுக்கு, உறுப்பினர் அட்டையை மாநில தலைவர் எல்.முருகன் வழங்கினார்.

சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- முருகன்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசி வழங்குவதிலும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இதுவரை 96 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27-ம் தேதி பழனியில் தானும், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியும் காவடி எடுக்க உள்ளோம். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா? தமிழைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்கு அருகதை இல்லை. அவரால் ஒரு திருக்குறளை சொல்ல முடியுமா?

பாஜகவில் கேங் ஸ்டர்கள் சேர்ந்து வருவதாக தி.க.தலைவர் வீரமணி கூறுகிறார். ஒரு கேங்ஸ்டர்களுக்கு தான் மற்றொரு கேங்ஸ்டர்களை தெரியும். விவசாயிகளின் போராட்டம் தூண்டிவிடப்பட்ட ஒன்று. விவசாயிகளின் பெயரில் Urban Naxals தான் போராடுகிறார்கள். சசிகலா விரைவில் குணமடைய வேண்டும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை” எனக் கூறினார்.