வெற்றிவேல் யாத்திரை நடத்தி தமிழகம் ஆன்மீக பூமி என்பதை உணர்த்தினோம்- எல் முருகன்

 

வெற்றிவேல் யாத்திரை நடத்தி தமிழகம் ஆன்மீக பூமி என்பதை உணர்த்தினோம்- எல் முருகன்

பாஜக சார்பில் சென்னை மதுரவாயலில் நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மாநில தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி, சுதாகர் ரெட், கே.டி.ராகவன், பாஜகவின் மூத்த தலைவர்கள் இல. கணேசன், பொன். ராதா கிருஷ்ணன், சிபி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெற்றிவேல் யாத்திரை நடத்தி தமிழகம் ஆன்மீக பூமி என்பதை உணர்த்தினோம்- எல் முருகன்

நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், “தமிழர்கள் பண்பாட்டையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பாஜகவினரை விட யாரும் மதிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஜேபி நட்டா வேட்டி சட்டையுடன் வந்துள்ளார். பொங்கல் விழாவில் நட்டா பங்கேற்றது, பெருமையாக உள்ளது. தங்களின் கோரிக்கையை ஏற்று தைப்பூசம் – அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பாஜக புதிதாக கொண்டாடவில்லை, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற்று இருக்கக் கூடிய காரணத்தினால் நம்ம ஊர் பொங்கல் என்று பெயர் வைத்து கொண்டாடுகிறோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் நமக்கு வழிகாட்ட அகில இந்திய தலைவர் இன்று வந்துள்ளார். தமிழர் பண்பாட்டை காக்க எங்களை தவிர இங்கு யாருக்கும் அருகதை இல்லை. வெற்றிவேல் யாத்திரை நடத்தி தமிழகம் ஆன்மீக பூமி என்பதை உணர்த்தினோம்” எனக் கூறினார்.