முதல்வர் வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: எல் முருகன்

 

முதல்வர் வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: எல் முருகன்

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் தேசிய தலைமை அறிவிக்கும் என பாஜக தேசிய தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நண்பன் மோடி என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆயிரம் கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவில் உள்ள நன்மைகளை விளக்கும் கூட்டம் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் தஞ்சை மாவட்டம் கள்ளபெரம்பூரில் தஞ்சை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகளுடனான விளக்கக் கூட்டம் மாநில தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தினால் அவர்களுக்கு நன்மை கிடைத்தால் விவசாயிகள் மோடி பக்கம் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் திமுக இடதுசாரி கட்சிகள் மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. கூட்டணியை பொருத்த வரை ஏற்கனவே உள்ள கூட்டணி தொடர்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான முதலமைச்சரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கு பெற்ற கூட்டத்தில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கூட்டணி தொடரும் என அறிவித்திருக்கிறார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என தேசியத் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும்” என தெரிவித்தார்.