வேல் யாத்திரை என்ன ஆனது? – எல் முருகன் விளக்கம்

 

வேல் யாத்திரை என்ன ஆனது? – எல் முருகன் விளக்கம்

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் சென்னை விமான நிலையத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, “புயல் காரணமாக வேல் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதி தொடங்கி மீதி இருக்கும் யாத்திரைகள் தொடர்ந்து நடைபெறும். ஏழாம் தேதி அன்று திருச்செந்தூரில் நிறைவு பெறும். நிறைவு விழாவிற்கு மத்தியபிரதேச முதலமைச்சர் வருகை தர உள்ளார். ரஜினி மிகப்பெரிய ஆன்மீகவாதி, தேசபக்தர் என்ன முடிவெடுத்தாலும் பாஜக அதனை முழு மனதோடு வரவேற்கிறது.

வேல் யாத்திரை என்ன ஆனது? – எல் முருகன் விளக்கம்

பொதிகை தொலைகாட்சியில் சமஸ்கிருத மொழியில் செய்தி ஒளிப்பரப்பானதற்கு குறிப்பிட்ட மொழியை தாக்கி கருத்து சொல்வது சரி இல்லை. பாஜக மாவட்டத் தலைவர் கலிவரதன் மீதான புகார் பற்றிய கேள்விக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தமிழிசை கூறியது தான் நாங்களும் சொல்கிறோம். இந்த ஆண்டு சட்டப் பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். வேளாண் திருத்த சட்டத்தை தமிழக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்றுள்ளனர். திமுக அதனை வைத்து மிகப்பெரிய அளவில் பிரச்னை செய்ய இருந்தது. ஆனால் இந்த வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பான சட்டம் என விவசாயிகள் நினைப்பதால் எதிர்க்கட்சிகள் உடைய பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது” எனக் கூறினார்.

தமிழக பாஜக நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரையை அறிவித்தது. திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரை முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளை இணைக்கும் விதமாக திருச்செந்தூரில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. வேல்யாத்திரையை பாஜக அரசியல் நோக்கத்துடன் நடத்துவதாகவும் வேல் யாத்திரை மூலம் மத ரீதியான பதற்றங்களை பாஜக செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக அரசு வேல் யாத்திரைக்கு தடை விதித்தது. ஆனால், தடையை மீறி பாஜக வேல் யாத்திரையை நடத்தியது. இதனால் பாஜக நிர்வாகிகள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். புயலால் பாஜகவின் வேல் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.