உண்மையில் திமுக ஆட்சியில்டான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது – எல்.முருகன்

 

உண்மையில் திமுக ஆட்சியில்டான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது – எல்.முருகன்

வேல் யாத்திரை நடத்துவதற்காக பழனி வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் பழனி ரயில்வே பீடர் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு பேசினார். அப்போது அனுமதி இன்றி பொதுக் கூட்டம் கூட்டியதாக கூறி போலீசார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல் முருகனை கைது செய்தனர்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும். பிரதமர் மோடியின் திட்டத்தை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொரோனாவுக்கு பயந்து வெளியே வரவில்லை. ஸ்டாலின் முதலமைச்சர் கனவு கனவாகவே போகும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறும் கனிமொழி தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை காலில் விழுந்தது பற்றி பேசாதது ஏன்? திமுகவினர் ஊழல் வாதிகள். திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை திமுகவினர் காலில் விழுந்து வணங்கும் அளவிற்கு உள்ளது. எதற்கெடுத்தாலும் டுவிட் போடும் கனிமொழி ஏன் இந்த விவகாரத்தில் வாய்திறக்கவில்லை.

உண்மையில் திமுக ஆட்சியில்டான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது – எல்.முருகன்

கருப்பர் கூட்டம் பின்னணியில் தி.மு.க வை சேர்ந்தவர்களே இருந்தனர். கருப்பர் கூட்டத்தை காவி கூட்டம் விரட்டும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள். உண்மையில் திமுக ஆட்சியில்டான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது” எனக் கூறினார்.