Home தமிழகம் வெற்றிவேல் யாத்திரை அவசியம் அல்ல; அத்தியாவசியம்- எல் முருகன்

வெற்றிவேல் யாத்திரை அவசியம் அல்ல; அத்தியாவசியம்- எல் முருகன்

தமிழ் கடவுள் முருகனின் புகழை போற்றும் வகையிலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பொருட்டும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனியில் யாத்திரையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், கர்நாடகா மாநிலம துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், மாநில துணைதலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதிஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், “வெற்றி வேல் யாத்திரை அவசியமா என கேட்கிறார்கள். இது அவசியம் இல்லை அத்தியாவசியம், இந்த யாத்திரை துவங்கியது முதல் ஸ்டாலினுக்கும் அவரது கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தூக்கம் தொலைந்து விட்டது. இந்த யாத்திரையை யார் தடுக்க நினைக்கிறார்களோ அவர்கள்தான் கலவரம் செய்ய நினைக்கிறார்கள். எங்கெங்கு யாத்திரை செல்கிறதோ அங்கெல்லாம் எழுச்சி ஏற்படுகிறது. கோவை தியாக பூமி பாஜகவிற்காக ரத்தம் கொடுத்த பூமி. யாத்திரை எங்கெங்கு சென்றுள்ளதோ அங்கெல்லாம் பாஜகவினர் எழுச்சி கண்டுள்ளனர்.

டிசம்பர் ஐந்தாம் தேதி யாத்திரை முடிக்கப்படவுள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தே தீரும் எதிரிகளை வீழ்த்தியே தீரும். கொரோனா காலத்தில் அத்தனை கட்சிக்காரர்களும் வீட்டில் படுத்துக்கொண்டார்கள். இன்றுவரை ஸ்டாலின் வெளியே வரவில்லை. ஆனால் பாஜகவினர் அத்தனை பேரும் வெளியே வந்து உயிரை பணையம் வைத்து உணவளித்தனர். முன்களப்பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த யாத்திரை

கருப்பர் கூட்டம் என்ற கயவர் கூட்டத்தினர் முருக கடவுளை விமர்சித்து வீடியோ வெளியிட்டனர், இதனை யாரும் கண்டிக்கவில்லை. அவர்களுக்கு தக்க பாடம் புகட்டவே வேல் யாத்திரையை பாஜக கையில் எடுத்தது. நம் அழைப்பை ஏற்று எழுபது லட்சம் பேர் வேல் பூஜை செய்தனர். கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் ஸ்டாலின் இருக்கிறார் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. அந்த கூட்டத்தை தமிழகத்தை விட்டே விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது. கோவை பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி அவர்களுக்கு 6000 ரூபாயை கொடுத்துள்ளோம். விவசாய சீர்திருத்த சட்டம் நன்மை கொடுக்க கூடியது. தக்காளி விலை குறைந்தாலும் ஒப்பந்த விலைகே வாங்க வேண்டும் எனதுதான் அச்சட்டத்தின் சிறப்பு. மத்திய அரசின் திட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் , ஒரு பயனாளிகள் உள்ளனர்” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“என் புருஷன கொலை செஞ்சத போல உன் புருஷனையும் கொல்வேன்” -குடும்ப சண்டையில் நடந்த கொலை

ஒரு குடும்பத்தில் மாமா மச்சானுக்குள் நடந்த சண்டையில் மைத்துனரை தீ வைத்து கொன்ற ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தார்கள் .

நிவர் புயல் எதிரொலி: விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

வங்கக்கடலில் நேற்று உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகரிப்பதால்,...

போ புயலே போய்விடு…’நிவர் புயல்’ குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை!

நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து புயல் குறித்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் கடந்த 21ஆம்...

சூழலுக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் : தமிழக அரசு

நிவர் புயல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தந்த மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளை மூடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!