விநாயகர் ஊர்வலத்திற்கு நாங்கள் அனுமதி கேட்கவில்லை: பாஜக மாநிலத் தலைவர் எல்‌‌.முருகன்

 

விநாயகர் ஊர்வலத்திற்கு நாங்கள் அனுமதி கேட்கவில்லை: பாஜக மாநிலத் தலைவர் எல்‌‌.முருகன்

தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே விநாயகர் சதுர்த்தியன்று வீடு, கோயில், தனியார் இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் என்றும் விநாயகர் சிலைகளை வழிபட்டபின் அவரவர் ஏற்பாடுகளில் கூட்டமாக சேராமல் மாலையில் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்தது.

விநாயகர் ஊர்வலத்திற்கு நாங்கள் அனுமதி கேட்கவில்லை: பாஜக மாநிலத் தலைவர் எல்‌‌.முருகன்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்‌‌.முருகன், “சற்று முன்பாக இந்து முன்னணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. அதில் வீடுகளில் கோவில்களில் அரசாங்க விதிமுறைக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடப்படும் என கூறியுள்ளது. அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. பொதுமக்களின் கோரிக்கை நாங்கள் அரசாங்கத்திடம் கூறினோம். ஊர்வலத்திற்கு நாங்கள் அனுமதி கேட்கவில்லை.

கொரோனா சூழலை மனதில் வைத்துதான் திருவிழா கொண்டாட நடவடிக்கை எடுத்தோம். நாங்கள் கேட்டதை அரசாங்கம் கொடுத்துள்ளது அந்த வழிகாட்டுதலின்படி நாங்கள் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உள்ளோம்” எனக் கூறினார்.