வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; கூட்டணியை மாற்றும் பாஜக! எல் முருகன் சூசகம்

 

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; கூட்டணியை மாற்றும் பாஜக! எல் முருகன் சூசகம்

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், “பாஜகவில் பல்வேறு தரப்பினர் தானாக முன் வந்து இணைத்துக் கொண்டு வருகின்றனர். பாஜகவின் ஊழலற்ற ஆட்சியை அனைவரும் விரும்புகிறார்கள். இன்று கோவையில் தொழில் துறையை சேர்ந்த 120 பேர் இணைந்துள்ளனர். வேல் யாத்திரை திட்டமிட்டபடி நாளை தர்மபுரியில் துவங்க உள்ளது. 21 ஆம் தேதி அமித்ஷா சென்னை வர உள்ளார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளோம். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்போது சரியான கூட்டணியை பாஜக அமைக்கும். தேர்தல் கூட்டணி பற்றி பாஜகவின் தலைமை முடிவெடுக்கும்.

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; கூட்டணியை மாற்றும் பாஜக! எல் முருகன் சூசகம்

கந்த சஸ்டி கவசத்தை அவ மரியாதை செய்ததன் விளைவாக முருக பக்தர்களை ஆறுதல் படுத்தவே வேல் யாத்திரை. கொரோனா தொற்று உள்ள போது தமிழகத்தில் எந்த இடத்திலும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. அதற்கு டாஸ்மாக் கடைகள் திறந்ததே காரணம். திமுக கூட்டங்களிலும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. அமித்ஷா வருகை பாஜகவினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுக்கும்” எனக் கூறினார்.