கடவுளுக்கோ, தமிழுக்கோ தீங்கு என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்: எல் முருகன்

கடவுளுக்கோ, தமிழுக்கோ தீங்கு என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்: எல் முருகன்

சென்னை திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெற்றிவேல் யாத்திரை குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சிடி.ரவி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா, நயினார் நாகேந்திரன், பொது செயலாளர் கரு.நாகராஜன், ஜிகே செல்வகுமார், கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், பாஜகவினர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கடவுளுக்கோ, தமிழுக்கோ தீங்கு என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்: எல் முருகன்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் முருகன், “என்ன நடந்தாலும் வேல் யாத்திரை துள்ளிவரும். பாஜகவினர் ஒருபோதும் சட்டத்தை மீறுபவர்கள் அல்ல. கடவுளுக்கோ, தமிழுக்கோ தீங்கு என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்போகிறோம்” எனக் கூறினார்.