‘மனுஸ்மிருதி’ என்ற ஒன்று இல்லைவே இல்லை- எல் முருகன்

 

‘மனுஸ்மிருதி’ என்ற ஒன்று இல்லைவே இல்லை- எல் முருகன்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “ பாஜக சார்பில் ஆளுநருக்கு எங்கள் நன்றி. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பலன் தரும் வகையில் மருத்துவ உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி. தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். கேடயமாக உள்ளார். இது போலி சமூக நீதி. எதற்காக வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும். தமிழ்க்கடவுள் முருகனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். முருகனை இழிவு படுத்திய கருப்பர் கூட்டம் பின்னால் திமுக இருந்தது. வேல் யாத்திரைக்கு ஆதரவு பெருகி விடுமோ மக்கள் ஆதரவு அதிகரிக்கும் என்ற பயத்தில் ஸ்டாலின் தனது கூட்டணி கட்சியினரை வைத்து பேச வைக்கிறார். ஸ்டாலின் ஏன் பேச மறுக்கிறார். திமுகவின் முகத்திரையை மக்களிடம் எடுத்துச்செல்லும் விதமாக வேல் யாத்திரை நடைபெற உள்ளது.

‘மனுஸ்மிருதி’ என்ற ஒன்று இல்லைவே இல்லை- எல் முருகன்

மனுஸ்மிருதி என்ற ஒன்று இல்லவே இல்லை. அம்பேத்கார் உருவாக்கிய சட்டத்தால் மட்டுமே நாடு, ஜனநாயகம் இயங்கி கொண்டுள்ளது. நடைமுறையில் இல்லாத ஒன்றை எப்படி தடை செய்ய முடியும். திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது. பாஜக மூலை மூடுக்கெல்லாம் வளர்ந்து கொண்டுள்ளது. யாத்திரை நடந்தால் பிஜேபி பக்கம் மக்கள் வந்துவிடுவார்கள் என்ற பயம். எந்த தடை வந்தாலும் யாத்திரை நடக்கும். தேர்தல் வரட்டும். யார் வெற்றிப் பெற போகிறார்கள் என பார்க்கலாம்” இவ்வாறு கூறினார்.