7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை வரவேற்கிறோம்: எல் முருகன்

 

7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை வரவேற்கிறோம்: எல் முருகன்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதனிடையே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைக்க கால தாமதமாவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை வரவேற்கிறோம்: எல் முருகன்

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பா.ஜ.க கட்சி பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் எல்.முருகன், “மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை பா.ஜ.க வரவேற்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் தான் பா.ஜ.க வேல் யாத்திரிக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறுகிறார்கள். பா.ஜ.க வை காலாவதியான கட்சி சொல்பவர்கள் காலாவதியான தலைவர்கள் தான்” எனக் கூறினார்.