நீட் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடி சிறிய குளறுபடிதான்: எல். முருகன்

 

நீட் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடி சிறிய குளறுபடிதான்: எல். முருகன்

தமிழக பாஜக வழக்கறிஞர் அணி சார்பில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பாஜக அலுவலகத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திறந்து வைத்தார். இந்த கொலுவில், ரபேல் விமானம், ராமர் கோவில் என மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

நீட் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடி சிறிய குளறுபடிதான்: எல். முருகன்

நவராத்திரி விழாவையொட்டி கமலாலயத்தில் கொலுவை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் எல்.முருகன், “நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்த தமிழக மாணவருக்கு வாழ்த்துக்கள். அரசு பள்ளி மாணவர் சாதனை படைத்திருப்பது நீட் வேண்டாம் என சொன்னவர்களுக்கு பதிலடி. திரிபுரா போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடி சிறிய குளறுபடிதான். எல்லா தேர்வுகளிலும் குளறுபடி இருக்கும், அதற்காக தேர்வை ரத்து செய்ய முடியுமா ? பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய முடியுமா? தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.