கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதை விட்டு அரசுடன் இணைந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும் – எல்.முருகன்

கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதை விட்டு அரசுடன் இணைந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும் – எல்.முருகன்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, டாக்சி இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வருகிற 19ம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதை விட்டு அரசுடன் இணைந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும் – எல்.முருகன்

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் எல். முருகன், “சென்னை, திருவள்ளுர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. இந்த பொதுமுடக்கத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்ததால் கொரனோ தொற்று அதிக அளவு பரவுவது கட்டுபடுத்தப்பட்டுள்ளது. கொரனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. கொரனோ விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதை விட்டு விட்டு அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறினார்.