முதல்வர், துணை முதல்வருடன் பாஜக மாநில தலைவர் திடீர் சந்திப்பு! நடந்தது என்ன?

 

முதல்வர், துணை முதல்வருடன் பாஜக மாநில தலைவர் திடீர் சந்திப்பு! நடந்தது என்ன?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடந்தது. அவரோடு தமிழக பாஜக துணை தலைவர்கள் கே எஸ் நரேந்திரன், அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு செயலாளர் விநாயகர் ஆகியோரும் உடன் சென்றனர்.

முதலில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து துணை முதலமைச்சரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர், துணை முதல்வருடன் பாஜக மாநில தலைவர் திடீர் சந்திப்பு! நடந்தது என்ன?

முதல்வர் மற்றும் துணை முதல்வருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “முதல்வர் துணை முதல்வர் ஆகியோருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக நேரில் சந்தித்தேன். இருவருக்கும் எனது வாழ்த்து தெரிவித்தேன். வேல் யாத்திரை மற்றும் அரசியல் சார்ந்து எதுவும் பேசவில்லை” எனக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் நரேந்திரன், “பாஜக மாநில தலைவர் எல். முருகனும் நானும் முதல்வருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தோம். வேல் யாத்துரை பொறுத்தவரையில் காலை முருகன் என்ன கூறினாரோ அதேதான். கண்டிப்பாக வேல் யாத்திரை நடக்கும். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை” எனக் கூறினார்.