நடிகர் அர்ஜூனை சந்தித்து பேசிய பாஜக எல். முருகன்!

 

நடிகர் அர்ஜூனை சந்தித்து பேசிய பாஜக எல். முருகன்!

போரூர் அருகே கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு நடிகர் அர்ஜூன் கோவில் கட்டி வருகிறார். ஒரு ஏக்கர் நில பரப்பில் உருவாகிவரும் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக கர்நாடக மாநிலம் கொய்ராவில் இருந்து ஆஞ்சநேயர் சிலை கொண்டு வரப்பட்டது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. 28 அடி உயரமும், 140 டன் எடையும் கொண்டது இந்த சிலை. அத்துடன் ராமர் உள்ளிட்ட மேலும் பல கடவுள் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது அர்ஜூனுக்கு நீண்ட நாள் கனவாகும்.

நடிகர் அர்ஜூனை சந்தித்து பேசிய பாஜக எல். முருகன்!

இந்நிலையில் நடிகர் அர்ஜூன் கெருகம்பாக்கத்தில் கட்டிக்கொண்டிருக்கும் அனுமன் கோவில் கட்டும் இடத்திற்கு சென்று, கோவில் கட்டி இறை திருப்பணி செய்யும் அர்ஜூனுக்கு பாஜக தேசிய தலைவர் முருகன் சால்வை போட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவருடன் ஆலோசனை நடத்தினார்.