மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

 

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

மத்திய பிரதேசத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியேற்று ஓரிரு மாதங்களே ஆகும் நிலையில் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகனை பாஜக தலைமை அறிவித்தது. மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்திற்கு எம்.பியாக எல்.முருகன் தேர்வாகியுள்ளார். ராஜ்யசபாவில் பாஜக உறுப்பினர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். எனவே, ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் இருக்காது என தெரிகிறது.

இந்த நிலையில், மத்தியபிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கனவே பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது மணிப்பூர் ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.