கொங்குநாடு விவகாரம் : எல்.முருகனின் சொன்ன விளக்கத்தால் பாஜகவினர் அதிர்ச்சி!

 

கொங்குநாடு விவகாரம் : எல்.முருகனின் சொன்ன விளக்கத்தால் பாஜகவினர் அதிர்ச்சி!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனும் இடம்பெற்றிருந்தார். மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்ட எல்.முருகனுக்கு 3 துறைகள் ஒதுக்கப்பட்டது. எல்.முருகன் பதவியேற்ற தினத்தன்று அவரை பற்றிய விவரக் குறிப்பில் ‘கொங்குநாடு’ என்று இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்குள்ளானது.

கொங்குநாடு விவகாரம் : எல்.முருகனின் சொன்ன விளக்கத்தால் பாஜகவினர் அதிர்ச்சி!

அதாவது, தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தை தனியாக பிரித்து தனி யூனியன் பிரதேசமாக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாகவும் மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுகவினர் அழைப்பதால் அதற்காக பழிவாங்கும் பொருட்டு மத்திய அரசு இதனை செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. தமிழகம் இரண்டாக பிரிக்கப்படுவதாக வெளியான இந்த செய்திக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்தனர். பாஜகவினர் மறைமுகமாக இதனை ஆதரித்தனர். இது பற்றி மத்திய பாஜக அரசிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் புகைந்து கொண்டே இருக்கிறது.

கொங்குநாடு விவகாரம் : எல்.முருகனின் சொன்ன விளக்கத்தால் பாஜகவினர் அதிர்ச்சி!

இந்த நிலையில், தனது விவரக் குறிப்பில் கொங்குநாடு என்று இடம்பெற்றிருந்தது தட்டச்சு பிழை என எல்.முருகன் தெரிவித்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எல்.முருகன், அமைச்சரவை மாற்றத்தின்போது வெளியிடப்பட்ட தனது விவரக் குறிப்பில் கொங்குநாடு என்று இடம்பெற்றிருந்தது தட்டச்சுப் பிழை என்று கூறினார். தமிழ் நாட்டை இரண்டாக பிரித்து கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் சிலர் மறைமுகமாக கூறிவரும் நிலையில் எல்.முருகன் இவ்வாறு தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.