கு.க.செல்வத்துக்கு வகுப்பெடுக்கும் எல்.முருகன்!

 

கு.க.செல்வத்துக்கு வகுப்பெடுக்கும் எல்.முருகன்!

சட்டப்பேரவையில் தி.மு.க-வுக்கு எதிரான கருத்துக்களை பகிர்வது தொடர்பாக கு.க.செல்வத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பாடம் நடத்த உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பா.ஜ.க-வின் குரலாக செயல்படுவேன் என்று கு.க.செல்வமும் அறிவித்துள்ளார்.
தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்து நீக்கப்பட்டவர் கு.க.செல்வம். தான் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டது தவறானது என்று கூறி சென்னை உரிமையியல்

கு.க.செல்வத்துக்கு வகுப்பெடுக்கும் எல்.முருகன்!

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கு.க.செல்வத்தின் பதவியை பறிக்க வேண்டும் சட்டப்பேரவை செயலாளரிடம் தி.மு.க அளித்த மனுவுக்கு தான் தி.மு.க-வில் இருப்பதாக பதில் அளித்துள்ளார் கு.க.செல்வம்.
சட்டப் பேரவையில் நீட் தேர்வு, பிரதமரின் விவசாயிகள் உதவித் திட்டத்தில் முறைகேடு, கொரோனாவில் மத்திய – மாநில அரசுகளின் தோல்வி உள்ளிட்ட பிரச்னைகளை தி.மு.க எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க கு.க.செல்வத்தை தயார் செய்யும் பணியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக

கு.க.செல்வத்துக்கு வகுப்பெடுக்கும் எல்.முருகன்!

கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை கு.க.செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், சட்டப் பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்னை பற்றி கு.க.செல்வத்துக்கு முருகன் ஆலோசனை வழங்கி உள்ளதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கு.க.செல்வத்துக்கு வகுப்பெடுக்கும் எல்.முருகன்!


தன்னை தானே தி.மு.க எம்.எல்.ஏ என்று கூறிக்கொள்ளும் கு.கசெல்வம் சட்டப் பேரவையில் பா.ஜ.க-வுக்கு ஆதரவான குரலை எழுப்புவார் என்று சொல்லப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் இன்று பேரவைக்கு வந்த கு.க.செல்வம் பாஜக-வின் கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.