”கணக்கு தொடங்கும்போது வீடியோ மூலமாக கேஒய்சி”எச்டிஎப்சி வங்கி அறிமுகம்

 

”கணக்கு தொடங்கும்போது வீடியோ மூலமாக கேஒய்சி”எச்டிஎப்சி வங்கி அறிமுகம்

புதிதாக வங்கி கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களிடம் வீடியோ மூலமாக கேஒய்சி பெறும் சேவையை எச்டிஎப்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி எச்டிஎப்சியில் புதிதாக தொடங்கப்படும் சேமிப்பு கணக்கு, கார்ப்பரேட் சம்பள வங்கி கணக்கு மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றிற்கு இந்த வசதி தற்போதைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வீடு அல்லது அலுவலகம் என எங்கிருந்தபடியும், தங்கள் செல்போனிலேயே கேஒய்சி தகவல்களை வங்கிக்கு வீடியோ மூலமாக அளிக்க முடியும்.

”கணக்கு தொடங்கும்போது வீடியோ மூலமாக கேஒய்சி”எச்டிஎப்சி வங்கி அறிமுகம்

இதற்கான வசதி ஆன்லைனில் எச்டிஎப்சி வலைதளத்தில் தரப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள், ஒடிபி முறையில் செயல்படும் ஆதார் இ-கேஒய்சியை பூர்த்தி செய்த பின்னர், இந்த வீடியோ கேஒய்சி தானாகவே திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது தங்களுடன் வீடியோ காலில் இணையும் வங்கி அதிகாரிகள், தங்களை பற்றிய விபரங்களை வீடியோ அழைப்பில் வங்கி பெற்றுக்கொள்வதுடன், பான் கார்டை அதில் காட்ட கூறி, அதை ஸ்கேன் செய்துகொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களை படம் எடுத்துக்கொள்வதோடு, தங்களை பற்றிய விபரங்களை அந்த உரையாடலில் வங்கி அதிகாரிகள் சரிபார்ப்பர் என தெரிகிறது.

”கணக்கு தொடங்கும்போது வீடியோ மூலமாக கேஒய்சி”எச்டிஎப்சி வங்கி அறிமுகம்

இதனால் எச்டிஎப்சியில் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு செல்லவோ, அல்லது படிவங்களை நிரப்பவோ இனி அவசியம் இருக்காது என்றும் இதனால் நேரமும், அலைச்சலும் மிச்சமாகும் என கூறப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்