• December
    09
    Monday

Main Area

Mainவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'!

sornakka
sornakka

எதாவது ஒருவிஷயத்துக்காக ஓவர்நைட்டில் ஒருவரை இந்த சமூத வலைத்தளங்கள் உலகம் முழுவதும் பிரபலமாக்கி விடுகின்றன என்பது இந்த சொர்ணாக்கா விஷயத்தில் நூத்துக்கு நூறு உண்மை.

நம் எல்லோராலும் செல்லமாகக் குட்டி சொர்ணாக்கா என்று அழைக்கப்படுவபவர் தான் இந்த சுட்டிப்பெண். இவர் திடீரென சோஷியல் மீடியாக்களில் யாரோ ஒருவரால் எடுத்து வெளியிடப்பட்ட விடியோ மூலம் ஓவர் நைட்டில் படு பேமஸாகிவிட்டார். 

நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் இந்த பெண் இப்படி அறிவாக பேசுகிறாரே இவர் உண்மையிலேயே சிறுமியா என்றெல்லாம் சந்தேகத்தை எழுப்பினர். 

நம்ம சொர்ணாக்கா இப்ப தான் திடீர்னு பேமஸாகிட்டாங்க. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்ம சொர்ணாக்காவின் முதல் விடியோ வெளியானது. அதில் அழகான குட்டிப்பெண் போல பிங்க் கலர் கௌன் அணிந்து கொண்டு, என்னை போட்டோ எடுக்கணும்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோ. இல்லையென்றால் போட்டோ எடுக்காத என்று தன்னை விடியோ எடுக்கும் நபரிடம் வீராப்பாகக் கூறுகிறார்.

sornakka

இந்த பெண்ணை குட்டி சொர்ணாக்கா என்றே நாம் அழைத்து பழகிவிட்டதால் பலருக்கும் அவருடைய நிஜப் பெயர் தெரியவில்லை. அவருடைய பெயர் ஜெயலலிதா!

இது அவர் பேமஸான பின் வைத்த பெயர் இல்லை. இவருடைய முதல் விடியோவிலேயே விடியோ எடுக்கும் நபர் உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு ஜெயலலிதா என்று தான் குறிப்பிடுகிறார்.

நம்ம சொர்ணாக்காவை பலரும் சிறுமி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவருக்கு வயது 22 ஆகிறதாம். உடல் வளர்ச்சி குன்றியதால் சிறுமி போன்ற தோற்றத்தில் இருக்கிறார். இவருடைய ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி. யதார்த்தமாக விடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி இப்போது டிரெண்டிங் பர்சனாலிட்டியாக மாறிவிட்டார் நம்ம சொர்ணாக்கா.

sornakka

தன்னை விடியோ எடுக்கும் அதே ஊரைச் சேர்ந்த நபரைப் பார்த்து உனக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்றும் அவர் தன்னை காதலிக்கும்படி கேட்டதற்கு மஞ்சள் தாலி வாங்கி வந்து கட்டு, காதல்னா என்ன அர்த்தம் கல்யாணம் முடிக்கணும்னு அர்த்தம் என்று மிகத் தெளிவாகவும் அழகாகவும் பேசுகிறார். திருமணமெல்லாம் வேண்டாம் லவ் மட்டும் போதும் என்று அந்த நபர் மீண்டும் சொல்ல, அது முடியாது மூடிக்கிட்டு போ, கண்ட கண்ட நாயெல்லாம் என்னால கல்யாணம் முடிக்க முடியாது என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நம்ம சொர்ணா.

சொா்ணாக்காவின் இந்த இரண்டாவது விடியோ செம வைரலாகிவிட அடுத்தடுத்த நிறைய விடியோக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அவரைத் தேடிப்போய் விடியோ எடுத்து பதிவிடத் தொடங்கிவிட்டார்கள்.  தான் வெளி உலகத்துக்கு பயங்கரமாகி விட்டோம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட சொர்ணாக்கா தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பி யாரேனும் வந்து கேட்டால் என்கூட போட்டோ எடுக்கணும்னா 50 ரூபாய். முதல்ல காச கொடுத்து டிக்கெட்ட வாங்கு என்று போட்டோவுக்கு கையில் பர்ஸ் வெச்சுகிட்டு காச கொடு, 60 ரூபாய் உனக்கு தள்ளுபடி 10 ரூபாய் என்கிறார். அவர் 10 ரூபாய் தருகிறேன் என்று சொல்பவரிடம் என்ன பிச்சையா? என்று மடக்குகிறார்.

sornakka

நீ என்கூட வர்றியா என்று ஒருவர் கேட்க நோ என்னோட லவ்வர் திட்டுவார். கையை பிடிக்காத சும்மா இரு என்று முகத்தில் வெட்கத்தோடு பேசுகிறார். இந்த விடியோவில் டிரஸ் கூட செம ஸ்மார்ட்டாக அணிந்திருக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த ஒரு வளர்ந்து வரும் புதிய இயக்குநர் சொர்ணாக்காவின் பக்கத்தில் உட்கார்ந்திருக்க, அவருடைய அம்மாவோ எழுந்து வாடா என்று அதட்டுகிறார். ஆனால் அவரோ நம்ம சொர்ணாக்காவிடம் என்னோட படத்துக்கு கால்சீட் தர்றீயா என்று கேட்க, அந்த பெண்ணும் தருகிறேன். உன்னோட போன் நெம்பர் கொடுத்துட்டு போ என்கிறார். 

அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்களுடைய சொர்ணாக்காவுக்கு புது டிரஸ் வாங்கிக் கொடுத்து, நகைகள் எல்லாம் போட்டு, நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு. தங்களுடைய காரில் ஏற்றி உட்கார வைத்து, போனை கையில் கொடுத்து டிக்டாக் வீடியோ எடுக்கிறார்கள். சொர்ணாக்காவும் வடிவேலுவின் டயலாக்கைப் பேசி டிக்டாக் விடீயோ செய்கிறார்.

sornakka

குடிகாரர்களைத் திருத்தவே முடியாது. குடிப்பதை நிறுத்துவதை விட்டு அரசை கடையை மூடு என்று சொல்வது, நீ குடித்துவிட்டு மல்லாக்க விழுந்தா நாங்களா பலி, அடிக்க வேண்டியது தான் அதுவும் ஒரு அளவு தான் என்று ரொம்ப பொறுப்பான பெண்ணாக பேசுகிறார். குடிப்பவர்களை கொன்றுவிடலாம். இப்போல்லாம் போலீஸ்காரங்க சினன் பிள்ளைகள் சொல்றத தான் நம்புறாங்க என்று சொல்ல, விடியோ எடுப்பவரோ யாரு நீ சின்ன பிள்ளையா என்று கேட்கிறார். இல்ல. அவங்க தான் அப்படி சொல்றங்கனு அலப்பறையாக சொல்கிறார்.

sornakka

நடிகர் விஜய் சேதுபதியுடன் படம் நடிப்பதாகவும் அந்த படத்தின் பெயர் கடைசி விவசாயி என்றும் அதில் தான் நடித்த அனுபவங்கள் பற்றியும் தன் ஊரில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் இந்த ஜெயலலிதா. அதில் தன்னுடைய கேரக்டரின் பெயர் வசந்தா என்று கூறுகிறார். அடுத்து பெரிய திரையில் ஒரு வலம் வந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறார் சொர்ணாக்கா.

2018 TopTamilNews. All rights reserved.