“பேரனை கடத்தி நாலு கோடி பேரம்” -குட்கா வியாபாரியின் பேரன் தலைக்கு நாலு கோடி விலை வைத்த கடத்தல் காரர்கள் ..

“பேரனை கடத்தி நாலு கோடி பேரம்” -குட்கா வியாபாரியின் பேரன் தலைக்கு நாலு கோடி விலை வைத்த கடத்தல் காரர்கள் ..

உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் குட்கா வர்த்தகர் ராஜேஷ் குமார் குப்தாவின் பேரன் வெள்ளிக்கிழமை பிற்பகல் சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார் .இப்போது பேரனை உயிரோடு விட வேண்டுமென்ன்றால் அவன் தலைக்கு நாலு கோடி விலை வைத்துள்ளனர் .

“பேரனை கடத்தி நாலு கோடி பேரம்” -குட்கா வியாபாரியின் பேரன் தலைக்கு நாலு கோடி விலை வைத்த கடத்தல் காரர்கள் ..
உ.பி .மாநிலம் கோண்டாவில் பிரபலமான குட்கா வியாபாரி ராஜேஷ்குமார் குப்தா .அவரின் ஆறு வயது பேரன் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் .கடந்த வெள்ளிக்கிழமை அவரின் பேரன் வீட்டருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த போது ,அவனருகே ஒரு கார் வந்து நின்றது .அந்த காரிலிருந்து ஒருவர் இறங்கி அந்த சிறுவனுக்கு சானிடைசர் ,மற்றும் முகக்கவசம் கொடுப்பது போல அருகே கூப்பிட்டார் .அதை உண்மையென நம்பிய அந்த சிறுவன் அந்த காரின் அருகே சென்றான் .அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த சிறுவனை காருக்குள்ளிருந்த சிலர் அவன் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினார்கள் .பிறகு அந்த சிறுவனோடு அந்த கார் வேகமாக பறந்து விட்டது .

“பேரனை கடத்தி நாலு கோடி பேரம்” -குட்கா வியாபாரியின் பேரன் தலைக்கு நாலு கோடி விலை வைத்த கடத்தல் காரர்கள் ..
அதன்பிறகு அந்த சிறுவனின் வீட்டில் அவனை காணாமல் அழுது கொண்டிருந்தனர் .அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு பெண் போன் செய்து உங்கள் பேரனை உயிரோடு பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக நாலு கோடி ரூபாய் பணம் ரெடி பண்ணுங்கள் என்று கூறிவிட்டு அந்த பெண் போனை கட் பண்ணிவிட்டார் .
பிறகு அந்த பேரனின் தாத்தாவும் ,தந்தை ஹரி குப்தாவும் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் தங்களின் பேரனை யாரோ சிலர் சுகாதார துறை அதிகாரிகள் போல வந்து, மாஸ்க் கொடுக்கும் சாக்கில் அவனை கடத்தி சென்றுவிட்டதாக புகார் தந்தனர் .போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு தீவிர விசாரணை நடத்தி அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமெராவினையெல்லாம் ஆராய்ந்து வருகிறார்கள் .ஒரு போலீஸ் தனிப்படை அமைத்து சிறுவனை தேடி வருகிறார்கள் .இந்த சம்பவத்துக்கு அம்மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தன்னுடைய ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .