டியர் ரஜினி சார், உங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை- குஷ்பு

 

டியர் ரஜினி சார், உங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை- குஷ்பு

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினி அரசியலில் களமிறங்கவிருக்கிறார் என்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் இப்போது வரை ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பதே புரியாத புதிராக இருக்கிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை மற்றும் தனக்கு மருத்துவர்கள் அறிவுரைகளாலேயே தான் வீட்டில் இருப்பதாகவும், தகுந்த நேரத்தில் என் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என்றும் விளக்கமளித்தார்.

டியர் ரஜினி சார், உங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை- குஷ்பு

இந்த நிலையில் பாஜகவில் அண்மையில் சேர்ந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள ரஜினி சார், உங்களது ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தவிர எங்களுக்கு வேறு சந்தோசமும் கிடையாது. நீங்கள் எங்களின் விலைமதிப்பற்ற ரத்தினம். நீங்கள் எங்களின் சொத்து. உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்கள். எந்த வகையிலும் உங்கள் மீதான எங்களின் அன்பு எப்போதும் குறையாது. எங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்களே எங்களுக்கு முன்மாதிரியானவர் ”எனக் குறிப்பிட்டுள்ளார்.