Home தமிழகம் "ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்" - காய்ச்சி எடுத்த குஷ்பு!

“ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்” – காய்ச்சி எடுத்த குஷ்பு!

சேலத்தில் நேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல், பாஜகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். குறிப்பாக, தமிழக ஆட்சியாளர்களான ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் மானமில்லாமல் மோடி, அமித் ஷா காலில் விழுந்துகிடப்பதாகக் கூறினார்.

"ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்" - காய்ச்சி எடுத்த குஷ்பு!
"ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்" - காய்ச்சி எடுத்த குஷ்பு!

தற்போது அதற்குப் பதிலடி கொடுத்துப் பேசியுள்ள குஷ்பு, “ராகுல் உண்மை தெரியாமல் பேசி இருப்பார் என்று நினைக்கிறேன். முதலில் அவரது கட்சிக்கு மானம் இருக்கிறதா என்று யோசித்து பார்த்து விட்டு பேச வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் அழுததை மறந்துவிட்டாரா? கூட்டணி பேசப்போகும் போது திமுக அவமரியாதை செய்வதாக வேதனைப்பட்டு பேசியது அவருக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

சோறு முக்கியமா.. சங்கம் முக்கியமா.. ராகுல் காந்தி.. ஸ்டாலினை.. நட்டா முன்பு  வெளுத்து வாங்கிய குஷ்பு | Khushbu attacks Rahul Gandhi and mk stalin in  madurai meeting - Tamil ...

அழுதும், கெஞ்சியும், அத்தனை அவமானங்களையும் தாங்கி தானே 25 சீட்களை வாங்கினார்கள். இதன் பிறகும் காங்கிரசுக்கு மானம் இருக்கிறதா? சிறிதளவேனும் மானம் இருந்து இருந்தால் அழவைத்த திமுகவோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்று வெளியே வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் மரியாதை உள்ள கட்சி, மானம் உள்ள கட்சி என்று மக்கள் பாராட்டி இருப்பார்கள்.

"ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்" - காய்ச்சி எடுத்த குஷ்பு!

ஆனால் தங்கள் தன்மானத்தை இழந்துவிட்டு தமிழர்களிடம் மானம் இருக்கிறதா என்று கேட்டால் சிரிக்கமாட்டார்களா? என்ன செய்வது? பாவம் ராகுல் இப்படித்தான் சிறுபிள்ளைத்தனமாக தெரியாமல் எதையாவது பேசுவார். அவரது பேச்சுக்கு பதில் சொல்வதே நேரத்தை வீணடிப்பது போல்தான்” என்றார். காங்கிரஸில் இருந்தபோது ராகுல் காந்தி வெட்கி நாணும் அளவிற்குப் புகழ்ந்து பேசிய குஷ்பு, பாஜகவில் சேர்ந்ததிலிருந்தே ராகுலை காய்ச்சி எடுக்கிறார். என்ன வன்மமோ…

"ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்" - காய்ச்சி எடுத்த குஷ்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...

தருமபுரி அருகே முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு!

தருமபுரி தருமபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி...
- Advertisment -
TopTamilNews