Home தமிழகம் 13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சகிதா பானுவிடம் விசாரணை தொடங்கியது காவல்துறை. அதில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமாருடன் சேர்ந்து சகிதா பானு, வேலை வாங்கி தருவதாகக் கூறி, பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. மேலும் அவர் அளித்த தகவலில், புகாரளிக்கப்பட்ட 13 வயது சிறுமியை கட்டாயப் படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

This image has an empty alt attribute; its file name is image-10.png

இது தொடர்பாக மதன்குமாரின் தாயார் செல்வி, அவரது தங்கை சத்தியா மற்றும் இடைத்தரகர்கள் உள்பட 12 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் காவல்துறை விசாரணையில், பாஜகவை சேர்ந்த நிர்வாகியும், அவரது நண்பரான எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தியும் சிறுமியிடம் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, “இது பயங்கரமானது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், குற்றவாளிகள், அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த பதவியில் இருந்தாலும், எந்தத் துறையில் பணிபுரிந்தாலும் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களை இரக்கமும் இன்றி தண்டிக்க வேண்டும். நீதியை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்கப்பட வேண்டும். குழந்தைக்கு எங்கள் ஆதரவு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

புதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா?

தென்னிந்தியாவில் கால் பதிக்கும் நோக்கில் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதன் முதல் அடித்தளமாக அமைச்சர் நமச்சிவாயத்தை இன்று ராஜினாமா செய்யவைத்து,...

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – மலை கிராமங்களுக்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, முதுவாக்குடி, முந்தல், சிறைக்காடு, சோலையூர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

‘நான்கு தலைநகரம்’ – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு!

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்ற மம்தா பேனர்ஜியின் கோரிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,...

காங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்

கமல்ஹாசன் தங்களது கூட்டனிக்கு வரவேண்டும். இல்லையென்றால் ஓட்டுக்கள் வீணாக சிதறிவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!